தொகுப்பு

Archive for 2010-01-13

பத்தினித் தெய்வம்!

பர்கூர் அருகே குடும்பதகராறில் விபரீதம்: கணவன் அடித்துக்கொலை
மனைவி கைது

பர்கூர், ஜன.12 – 2009. செய்தி – தினத்தந்தி

பர்கூர் அருகே குடும்ப தகராறில் கணவனை அடித்துக்கொலை செய்த மனைவி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மனைவி நடத்தையில் சந்தேகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவரது மனைவி பரிமளா (27). வெவ்வேறு பிரிவை சேர்ந்த இருவரும் 10 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு, மகள்கள் காவ்யாஸ்ரீ (6). வித்யாஸ்ரீ (2) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

திருப்பூரில் அறை எடுத்து தங்கி, அங்குள்ள கம்பெனி ஒன்றில் கண்ணன் வேலை செய்து வந்தார். அவர், மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க மாதம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் கண்ணன் சந்தேகம் அடைந்தார். அதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை உண்டானது. மனைவியை கண்காணிக்க கண்ணன் அடுத்தடுத்து ஊருக்கு வந்து சென்றார். எனவே, தகராறு மேலும் முற்றியது.

கணவன் அடித்துக்கொலை

மனவேதனை அடைந்த கண்ணன் சரிவர வேலைக்கு செல்வது கிடையாது. அத்துடன், தினமும் குடித்துவிட்டு மனைவியை தாக்கியுள்ளார். இதில், இருவருக்கும் பலமுறை கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்றும், கண்ணன் குடித்துவிட்டு மனைவியுடன் ரகளையில் ஈடுபட்டார். இதில், அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆவேசமடைந்த பரிமளா மத்துக்கட்டை மற்றும் மண்வெட்டி கட்டையால் சரமாரியாக கணவனை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மண்டை பிளந்து ரத்தவெள்ளத்தில் சாய்ந்த கண்ணன் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டார். பின்னர், கட்டிலில் இருந்து தவறி விழுந்து கண்ணன் இறந்து விட்டதாக பரிமளா எல்லோரையும் நம்பவைத்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சிகரலப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சுப்ரமணி பர்கூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து பிணத்தை கைப்பற்றினார்.

இது தொடர்பாக. வழக்கு பதிவு செய்து மனைவி பரிமளாவிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குடும்பதகராறில் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, மத்துக்கட்டையால் தாக்கியதில் கண்ணன் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டார் என்று பரிமளா போலீசார் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

அதையடுத்து, பரிமளா அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பர்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements