தொகுப்பு

Archive for 2010-01-12

கள்ளக்காதலைத் தடுத்ததால் கொலை செய்யப்பட்ட இன்னொரு கணவன்

கள்ளக்காதலை கண்டித்ததால் பயங்கரம். (ஒன்று விட்ட) அண்ணியுடன் சேர்ந்து அண்ணனை கொன்று புதைத்த வாலிபர்.

நாகர்கோவில், ஜன.10 – 2009. செய்தி – தினத்தந்தி

நாகர்கோவிலை அடுத்துள்ள கணியாகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பண்டாரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சீமோன். இவருடைய மகன் சுகுமாரன் (வயது 34). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பொன்னம்மாள் (28). இவர் திட்டுவிளை அருகே உள்ள பாக்கியநேரியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவா (7), வனிதா (3) என்று 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுகுமாரன் வெளிநாட்டுக்கு சென்றார். இதனால் பொன்னம்மாள் தனது 2 குழந்தைகளுடன் பண்டாரத்தோப்பில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த வீடு ஊரின் கடைசி பகுதியில் உள்ளது. தனியாக வசித்து வந்த பொன்னம்மாளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுகுமாரனின் சித்தப்பா ஜெயதாஸ் மகன் ஜேக் தாமஸ் (25) உதவிகள் செய்து வந்தார்.

கள்ளக்காதல்

இதனால் அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. கணவர் ஊரில் இல்லாததால் பொன்னம்மாள் தாமசையே எதற்கும் நாடினார். இது எல்லைமீறி விட்டது. தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளக்காதலை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் ஊராருக்கு தெரியவந்தது. இது வெளிநாட்டில் இருந்த சுகுமாரனின் காதுக்கும் எட்டியது. இதனால் கடந்த மாதம் அவர் அவசரமாக ஊருக்கு திரும்பிவிட்டார்.

கணவர் வந்ததால் பொன்னம்மாள் கள்ளக்காதலை தனது விருப்பம்போல தொடர முடியாமல் தவித்தார். கணவர் வெளியே செல்லும் நேரமாக பார்த்து தாமசை வரவழைத்து கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது பற்றி அறிந்து சுகுமாரன் கோபம் கொண்டார். மனைவியையும், தாமசையும் கண்டித்தார். இதனால், சுகுமாரனை தீர்த்துக் கட்டிவிடலாம் என கள்ளக்காதலர்கள் திட்டம் தீட்டினர்.

அடித்துக் கொலை

இந்த திட்டத்தின்படி கடந்த 7-ந் தேதி இரவு தாமஸ் தனது நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து சுகுமாரனை கம்பால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் சுகுமாரன் துடிதுடித்து இறந்தார்.

பின்னர் அவரது பிணத்தை அவர்கள் 3 பேரும் சுமந்து சென்று அருகில் உள்ள வாய்க்கால்கரையில் ரோட்டோரம் டெலிபோன் கேபிள் புதைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் போட்டு புதைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுகுமாரனை காணாததால் அவருடைய தம்பி பாபு மற்றும் குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். பின்னர் வடசேரி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகுமாரனை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை தாமசும், பொன்னம்மாளும் கிராம நிர்வாக அதிகாரி நடராஜனை சந்தித்து நடந்த விவரங்களை கூறி சரண் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் வடசேரி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் ஜமால் கைது செய்து வழக்கு பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து பிணம் புதைக்கப்பட்டிருந்த பகுதிக்கு தாமசை போலீசார் அழைத்து சென்றனர். இங்கு பிணம் புதைக்கப்பட்ட இடத்தை தாமஸ் அடையாளம் காட்டினார்.

பிணம் தோண்டியெடுப்பு

அதைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராமச்சந்திரன் முன்னிலையில் சுகுமாரனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது. பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் துர்நாற்றம் வீசியது. பின்னர் பிரேத பரிசோதனை நடத்தினார்கள்.

இந்த கொலை குறித்து ஜேக் தாமஸ், பொன்னம்மாள், பண்டாரத்தோப்பு அழகன்கோணம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் தாஸ் (23), பரமதாஸ் மகன் ராசப்பன் ஆகிய 4 பேர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
===================

இது இன்னொரு “ககாகொ”!
இந்த ஸ்கோர் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கிறது! பல பத்திரிக்கைகள் கள்ளக்காதல் சிறப்பு மலர்கள் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்!

Advertisements