தொகுப்பு

Archive for 2010-01-11

ம்ஹூம், பெண்கள் வன்முறையில் ஈடுபடவே மாட்டார்கள்!

கண்டக்டரை செருப்பால் அடித்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் குவிந்த பயணிகள்!

ஜனவரி 11,2010 – தினமலர்
=======================

இந்த செய்தியை நம்புகிறீர்களா, நீங்கள்?

பொது இடத்தில் நடந்த இத்தகைய வன்முறையை செய்தவர் நிச்சயம் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ஏன்? அப்படித்தானே ஐயா, இந்திய குடும்ப வன்முறைச் சட்டம் சொல்கிறது!

குடும்ப வன்முறையை ஆண் தான் செய்வான். பெண் தான் பாதிக்கப்பட்டவள் என்றும், ஆனால் கணவனின் தாய் பெண் கிடையாது என்றும் வரையறுத்திருக்கிறது இந்தச் சட்டம்.

ஆகையால் டிக்கெட் கேட்டதற்காக கண்டக்டரை கீழே தள்ளி செருப்பால் அடித்தவர் ஒரு பெண் வேஷம் போட்ட ஆணாகத்தான் இருக்கவேண்டும். பெண்ணியவாதிகளைக் கேட்டால் அப்படித்தான் சொல்வார்கள்.

அப்படி அது பெண்ணாகவே இருந்து விட்டால், தனக்கு அதுபோல் செருப்படி வாங்கும் பாக்கியம் கிட்டவில்லையே என்று ஏங்குவார்கள், சில கிழட்டு பெண்ணியவாத ஜொள்ளீஸ்வர போண்டா பதிவர்கள்!

இப்போது படியுங்கள் ஒரு அப்பாவி கண்டக்டரின் சோகக் கதையை!
========================

திருவொற்றியூர்:டிக்கெட் எடுக்கச் சொன்னதால், பஸ் கண்டக்டரை செருப்பால் அடித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பயணிகள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவொற்றியூர் பஸ் நிலையத்திலிருந்து எழும்பூர் செல்லும் மாநகர பஸ் (தடம் எண்: 28) நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ராணி (38) தனது இரு குழந்தைகளுடன் பஸ்சில் ஏறினார். ஒரு டிக்கெட் மட்டும் கேட்டார்.சிறுவர்கள் இருவருக்கும் மூன்று வயதுக்கும் மேல் ஆகிவிட்டதால், அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுங்கள் என கண்டக்டர் விக்ராந்த் (38) கூறினார்.

ராணியோ டிக்கெட் எடுக்க மறுத்தார். இதனால், “நீங்கள் டிக்கெட் எடுக்க வேண்டாம்; அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள்’ என்றார் விக்ராந்த். “நான் தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிறேன். என்னையா இறங்கச் சொல்கிறாய்’ என கத்திய ராணி, திடீரென கண்டக்டரை பிடித்து கீழே தள்ளினார். நிலை தடுமாறி அவர் விழுந்ததும், அவரது செருப்பை எடுத்து கண்டக்டரை சரமாரியாக அடித்தார். இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் ராணியை மடக்கிப் பிடித்தனர்.

திருவொற்றியூர் காவல் நிலையம் வந்ததும், பயணிகளே ராணியை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஸ்சிலிருந்து பயணிகள் ஒட்டுமொத்தமாக காவல் நிலையம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, விக்ராந்த் மட்டுமின்றி பயணிகளும் போலீசில் புகார் செய்தனர். பதிலுக்கு ராணியும் கண்டக்டர் தன்னை அடித்ததாக புகார் செய்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, ராணியை கைது செய்து, பின் ஜாமீனில் விடுவித்தனர். பெண் தாக்கியதில் காயமடைந்த விக்ராந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisements