தொகுப்பு

Archive for 2010-01-06

சென்னை பெண்ணிற்கு நோபெல் பரிசு!

ஆம். இந்த ஆண்டுக்கான நோபெல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டாலும், மனித குலத்தின் தலையெழுத்தை தலைகுப்புறக் கவிழ்த்து மாற்றமடையச் செய்யும் ஒரு புதிய கண்டுபிடிப்பு தோன்றியதால், ஸ்வீடன் நாட்டு நோபெல் கமிட்டியினர் அவசர அவசரமாகக் கூடி ஒரு சிறப்புப் பரிசை அறிவித்திருக்கிறார்கள்.

அப்படி அது என்ன கண்டுபிடிப்பு?

அதுதான் “கற்பழிப்பு மீட்டர்”. இந்த ஆயிரமாண்டுக்கு தன்னிகரில்லாத தலைசிறந்த கண்டுபிடிப்பு!

செய்திப் பத்திரிக்கைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் அந்தப் பொறியினை வெற்றிகரமாகப் பயன்படுத்திய பெண்மணியின் திருப்பெயர் ஹேமலதா என்று தெரிகிறது (பெயர் மாற்றப்பட்டிருக்கலாம்).

அவர் காவல் துறைக்கு அளித்துள்ள ”திகில்” வாக்குமூலத்தின்படி அவரை ஸ்ரீகுமார் என்பவர் 50 முறை கற்பழிப்பு செய்ததை அந்த மீட்ட்ர் மூலம் எண்ணிக்கைப் பிழை சிறிதுமின்றி துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறியிருக்கிறார்!

“கற்பழிப்பு” என்றவுடன் ஏதோ அந்த ஆள் இந்தப் பெண்மணியை வன்முறையைப் பயன்படுத்தி துன்புறுத்தி “வன்புணர்வு” செய்தார் என்று எண்ணிவிட்டாதீர்கள். அந்தப் பெண்மணியின் வாக்குமூலத்தின்படி அந்தப் பெண் ஒவ்வொரு முறையும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரான ஸ்ரீகுமாரின் வீட்டிற்குச் சென்று கற்பழிக்கப்பட்டு திரும்பி வருவார். மீண்டும் அவர் வீட்டிற்குச் செல்வார். அவர் “கற்பழிப்பார்”. இவர் திரும்பி வருவார். இதே போல் தொடர்ந்து பல முறை நடந்ததாம். மேலும் இது அந்த ஸ்ரீகுமாரின் இரண்டு வெவ்வேறு வீடுகளில் நடந்ததாம். அதாவது “தியாகராயநகர் வீட்டில் 30 முறையும், கோட்டூர்புரம் வீட்டில் 20 முறையும் என மொத்தம் 50 முறை” அந்த ஆண் கற்பழித்து அந்தப் பெண்மணியை “சீரழித்துள்ளார்”. இதிலிருந்து அந்த மீட்டரின் இன்னொரு சிறப்புத் தன்மை நமக்கு தெளிவாகத் தெரிகிறது – அதாவது எந்தப் பகுதியில் உள்ள எந்த வீட்டில் கற்பழிப்பு நிகழ்கிறது என்பதையும் “கூகிள் மேப்” போன்ற சாதனத்தின் மூலம் துல்லியமாகக் கணித்துக் காண்பிக்கும் திறமை கொண்டது அந்த மீட்டர் என்பது புலனாகிறது!

இந்தப் பெண் அரை ‘சென்சரி” தான் போட்டுள்ளார். முழு சென்சரி போடுவதற்குக் காத்திருக்கும் பொறுமை இல்லாமல், என்ன அவசரக் காரணமோ தெரியவில்லை, புகார் கொடுத்துவிட்டார். அந்த ஆணையும் கைது செய்துவிட்டார்கள். அந்த ஆள் டிமிக்கி கொடுக்கலாம் என்று பார்த்தார். விவரம் தெரியாத மனுஷன். இந்தியாவில் ஆணாகப் பிறந்துவிட்டு கைதாவதிலிருந்து தப்பிக்க முடியுமா, அதுவும் ஒரு பெண் புகார் கொடுத்த பிறகு!!

மூன்று ஆண்டுகளுக்கு முன் தன்னை அந்த நபர் கற்பழித்ததாக புகார் கொடுத்துள்ளார் அந்தப் பெண்மணி. ஆனாலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த ஆண் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவ்வளவு ஆண்டுகள் கழித்து புகார் கொடுத்துள்ளாரே இதை கருத்தில் கொள்ளலாமா என்று நீங்கள் கேட்டால், அது உங்களது “ஆணாதிக்க மனப்பான்மையின்” வெளிப்பாட்டைத்தான் காண்பிக்கிறது. இப்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் ஒரு பெண் தன்னை ஒரு ஆண் “கற்பழித்ததாக” புகார் கொடுத்தால் உடனே அவன் கைது செய்யப்படவேண்டும். அத்துடன் நிற்காது. சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகளின்படி அந்த நபரைத் தண்டிப்பதற்கு அந்தப் பெண்ணின் வாக்குமூலம் ஒன்றே போதும். மருத்துவரின் பரிசோதனையோ, வேறு சாட்சியங்களே தேவையில்லை! ஆகையால் இந்த சூழ்நிலையில் இந்த வினோதக் கண்டுபிடிப்பான “கற்பழிப்பு மீட்டர்” மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது என்பது திண்ணம்.

மேலும் அரசு சீக்கிரமே அமுலுக்குக் கொண்டுவர இருக்கும் “பெண்கள் மானபங்க” சட்டத்திற்கும் இதுபோன்ற மீட்டர் கண்டுபிடிக்கப்படுமா என்று பல பெண்ணிய அமைப்புகளும், இதனால் ஆதாயம் பெறப்போகும் நபர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் யூகிக்கலாம். வரப்போகும் சட்டப்படி எந்த ஒரு பெண்ணும் இன்னொரு ஆண் தன்னை “மான பங்கப்படுத்த” மனத்தில் எண்ணினான் என்று புகார் கொடுத்தால் பொதும், அந்த ஆண் ஜாமினின்றி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவான் என்று அறியப்படுகிறது. Yes. It is proposed to be a “cognizable and non-bailable and non-compoundable” offence!

இந்தச் சட்டத்தை நாம் இருகரம் நீட்டி வரவேற்போம். அப்போதுதான் இந்தியா முழுச் சுதந்திரம் அடைந்துவிட்டது எனக் கருதலாம்!

சரி, இந்தப் பெண்மணி 3 ஆண்டுகளுக்கு முன் 50 முறை கற்பழிக்கப்பட்டதாக இப்போது புகார் கொடுக்கிறார். அதுபோல் ”போன ஜன்மத்தில் ஒரு ஆண் தன்னை கற்பழித்ததாக” புகார் கொடுக்க வகை செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால்தான் பெண்களுக்கு எதிராக ஒவொரு நொடியும் நிகழும் குற்றங்களை அறவே களைய முடியும் என்று சில பெண்ணியவாதிகள் கருதுவதாகவும் ஒரு செய்திச் சிதறல்! அதற்கு ஏதுவாக இந்த கற்பழிப்பு மீட்டரில் மேம்பாடுகள் செய்யப்படுமா என்ற் அறியவும் அவர்கள் ஆவலாக இருக்கிறார்களாம்!

வாழ்க பெண் விடுதலை!

Advertisements