தொகுப்பு

Archive for 2010-01-05

காதலனை மிரட்ட குழந்தையைத் திருடிய பேதைப் பெண்!

காதலில் பிறந்தது என்று கூறி காதலனை மிரட்டி மணம் முடிக்க குழந்தை கடத்தல்
சென்னையில் இளம்பெண் கைது

பெங்களூர், ஜன.4 – 2009. செய்தி – தினத்தந்தி

காதலில் பிறந்தது என்று காதலனிடம் காண்பித்து மிரட்டி திருமணம் செய்வதற்காக உறவினர் குழந்தையை கடத்திய இளம்பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

குழந்தை கடத்தல்

பெங்களூர் சங்கர்நகரை சேர்ந்தவர் நாராயணப்பா. இவர் ஆர்.எம்.சி. யார்டில் கடை நடத்தி வருகிறார். இவரது 11 மாத ஆண் குழந்தை கிரண். கடந்த மாதம் 28-ந் தேதி அன்று திடீரென்று காணவில்லை.
இதுதொடர்பாக போலீசில் நாராயணப்பா புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், நாராயணப்பாவின் உறவுக்கார பெண் கவுரம்மாதான் குழந்தையை கடத்தியது தெரிந்தது.

சென்னையில் மீட்பு

இதைத்தொடர்ந்து, பெங்களூர் போலீசார் கவுரம்மா எங்கு சென்றார் என்பது பற்றி தீவிர புலன் விசாரணை நடத்தினர். அப்போது கவுரம்மா தனது காதலன் சிவமணியுடன் சென்னையில் தங்கி இருப்பதாக தெரியவந்தது. உடனே போலீசார் சென்னை அம்பத்தூருக்கு விரைந்தனர். அங்கு கவுரம்மாவை கைது செய்து, அவரிடம் இருந்து குழந்தை கிரணை மீட்டார்கள்.

போலீஸ் விசாரணையில் கவுரம்மா ஏன் குழந்தையை கடத்தினார் என்பது பற்றிய தகவல் தெரியவந்தது.

சென்னையை சேர்ந்த சிவமணி பெங்களூரில் தங்கி இருந்தபோது கவுரம்மா அவரை காதலித்து இருக்கிறார்.

உல்லாசம்

அப்போது காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் காதலை சிவமணியின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. மேலும் கவுரம்மாவை திருமணம் செய்து கொள்ள சிவமணியும் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் காதலனை மணக்க கவுரம்மா திட்டம் தீட்டினார். அதற்காக காதலனை மிரட்ட அவர் நாராயணப்பாவின் குழந்தை கிரணை கடத்தி சென்று தனக்கும், சிவமணிக்கும் பிறந்த குழந்தை என்று கூறி அவரையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டினார்.

திருமணம்

இதையடுத்து, இருவருக்கும் சென்னையில் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கவுரம்மா குழந்தையை கடத்தியதாக கைது செய்யப்பட்டு உள்ளார். மீட்கப்பட்ட குழந்தை சென்னையில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு நாராயணப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisements