தொகுப்பு

Archive for 2010-01-04

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைப் படுகொலை செய்த பாதகி

தூக்க மாத்திரை கொடுத்து கணவன் படு கொலை: நாடகம் ஆடிய மனைவி,கள்ளக்காதலனுடன் கைது
ஜனவரி 04,2010, தினமலர்
==================

”இளைஞர்களே, விதவைகளைத் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு புது வாழ்வு கொடுங்கள்” என்று பல பெண்ணிய வாதிகளும் வேறுபல “தலைவர்”களும் உங்களுக்கு அறைகூவல் விடுப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கோ, தம் பிள்ளைகளுக்கோ திருமணம் செய்யும் போது மட்டும் குலம், கோத்திரம் பார்த்து படே படே ஜோசியர்களை வெளி மாநிலங்களிலிருந்தெல்லாம் தருவித்து ஜாதகம் பார்த்து, சொத்து பார்த்து திருமணம் செய்வார்கள். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வார்கள். அத்தகைய மயக்கும் பேச்சால் கவரப்பட்டு சில அசட்டு ஜன்மங்கள் விதவைகளுக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்று கிளம்பி ஏதும் சரியாக விசாரிக்காமல் முடிவெடுத்து முடிச்சுப் போட்டு பின் வாழ்க்கையைத் துலைத்து நிற்பவர்கள் ஏறாளம்.

ஐயா, விதவைகள் விஷயத்தை தீவிரமாக விசாரியுங்கள். அவர்கள் சொல்வதையோ, அவர்களை உங்கள் முன் பரிந்துரைப்பவர்கள் கூற்றையோ நம்பாமல் தீர விசாரியுங்கள். அவர்கள் முக்கிய உண்மைகளை மறைத்திருக்கக்கூடும். வாழ்க்கை உங்களுடையது. உங்களைக் காப்பாற்றிக் கொள்வது உங்கள் கடமை. நாசூக்கு பார்க்காதீர்கள். முக்கியமாக கணவன் எப்படி இறந்தான், அதற்கான ஆவணம் என்ன, எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான் போன்ற விவரங்களை அக்கு வேறு ஆணி வேறாக தூண்டித் துருவி விசாரியுங்கள். மேலும் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுகளுக்குச் சென்று இந்த நபர் இறப்பில் ஏதும் வில்லங்கம் இருந்ததா என்பதை சல்லடை போட்டுச் சலியுங்கள். இறப்பு நடந்தாக சொல்லப்பட்ட தினத்தை அடுத்து வெளிவந்த நாளிதழ்களில் இது பற்றி செய்திகள் ஏதெனும் இருந்ததா என்பதையும் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றித் தேடிப்பாருங்கள்.

இல்லையெனில் இதன் கீழ் வரும் செய்தியில் காணப்படும் “ரேகா ஸ்வீட்டி” போன்ற கொலைகாரிகளிடம் சிக்கி, நீங்கள் இன்னொரு “அஷோக் குமார்” ஆகிவிடக்கூடாது அல்லவா!

இதோ படியுங்கள் கள்ளக் காதலனுடன் கூட்டுச் சேர்ந்து சேர்ந்து மனைவியால் கொல்லப்பட்ட அந்தப் பரிதாப அசோக் குமார் கொலையைப் பற்றி.

Ashok Kumar murdered by wife Rekhaஅம்பத்தூர்: ஆவடியில், கள்ளக்காதல் மோகத்தில், கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .சென்னை ஆவடி, பஜார் நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார்(24). அமைந்தகரையில் உள்ள சைக்கிள் கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரேகா சுவீட்டி(20) என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரலில் திருமணம் முடிந்தது, இருவரும் ஆவடியில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் குடியேறினர்.இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி, தனது சகோதரர் திருமணத்திற்கு சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு ரேகா சென்றார்.

இந்நிலையில், வருவதாக கூறிய தனது கணவர் வரவில்லை என, ஆவடியில் இருந்த அசோக்குமாரின் பெரியப்பா ரத்னா லாலுக்கு தொலைபேசியில் ரேகா தெரிவித்தார். இதையடுத்து, ரத்னா லால் அசோக்குமாரை தேடினார். அசோக்குமாரின் மொபைல் போனை தொடர்பு கொண்டபோது அதுவும், “சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, ஆவடி போலீசில், கடந்த டிசம்பர் 2ம் தேதி, ரத்னா லால் புகார் அளித்தார். புகாரின் பேரில், ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் துணை கமிஷனர் வரதராஜு (பொறுப்பு) கண்காணிப்பில், ஆவடி உதவிக் கமிஷனர் அழகர் ராஜா, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், எஸ்.ஐ., பெரியபாண்டி மற்றும் போலீசாரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

தனிப்படை போலீசார், ரேகாவை மீண்டும் அழைத்து நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து, ரேகா மீதான போலீசின் பிடி இறுகவே, கணவனை, கள்ளக்காதனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.இதுகுறித்த விசாரணையில், ரேகா திருமணத்திற்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தார். அங்கு, ஆற்காட்டைச் சேர்ந்த சையது ஆசிம் (25) என்பவர் தனது சித்தப்பாவின் பேன்சி கடையில் பணியாற்றி வந்தார். அடிக்கடி பேன்சி கடைக்கு ரேகா சென்றதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து, ஜாலியாக இருந்துள்ளனர். இந்நிலையில், குடும்ப கவுரவம் கருதி, அசோக்குமாருடனான திருமணத்திற்கு ரேகா ஒப்புக் கொண்டுள்ளார்.

திருமணம் முடிந்து, ஆவடி வந்த பின்பும், தனது காதலனுடனான தொடர்பை, ரேகா விடவில்லை. ஆசிம் அடிக்கடி ஆவடி வந்து, காதலியைச் சந்தித்து, தனது கள்ளக்காதலை வளர்த்துள்ளார்.ரேகாவுக்கு, ஆசிமை பிரிய மனமில்லாத நிலையில், இருவரும் சேர்ந்து, தங்களுக்கு தடையாக இருக்கும் அசோக்குமாரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். ஆசிம் தனது நண்பரான, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (19) மூலம், நவம்பர் 26ம் தேதி, 30 தூக்க மாத்திரைகளை ரேகாவிடம் கொடுத்துள்ளார். அன்று இரவு, பாலில் அனைத்து மாத்திரைகளையும் கலந்த ரேகா, கணவனை குடிக்கச் செய்தார். அசோக்குமாரும் மனைவியை நம்பி குடித்ததும், மயங்கினார். கணவன் இறந்து விட்டதாக நினைத்த ரேகா, ஆசிமிற்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆசிம், தனது நண்பர் வினோத் மற்றும் ஆற்காட்டைச் சேர்ந்த, கால் டாக்சி வைத்திருக்கும் மற்றொரு நண்பரான தாலிப் பாட்சா(21) ஆகியோருடன் ஆவடி வந்தார்.வீட்டில் இருந்து காரில் அசோக்குமாரை ஏற்றும் போது, அவருக்கு உயிர் இருப்பது தெரிந்து, ரேகா மற்றும் ஆசிமின் நண்பர்கள் பிடித்துக் கொள்ள, ஆசிம் கழுத்தை நெரித்து, அசோக்குமாரை கொன்றுள்ளார். காரில் ஏற்றி மூவரும் ஆற்காடு சென்று அங்கிருந்து ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஜி.டி., நகர் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில், வாகனம் ஒன்றில் ஆட்கள் வரவே, அப்படியே பிணத்தை போட்டுவிட்டு, தப்பியுள்ளனர். ஜி.டி., நகர் காட்டுப்பகுதியில், துர்நாற்றம் வீசுவதாக தகவல் வரவே, அப்பகுதி போலீசார் பிணத்தை கைப்பற்றி, அடையாளம் தெரியாதவர் என்ற பெயரில் அடக்கம் செய்துவிட்டனர்.இதற்கிடையில், கணவனை கொலை செய்த ரேகா ஒன்றும் அறியாதவர் போன்று ராஜஸ்தான் சென்று பின், அங்கிருந்து கணவன் அங்கு வரவில்லை என்று அவரது பெரியப்பாவிற்கு போன் செய்துள்ளார். இவ்வாறு, விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, ரேகா சுவீட்டி, கள்ளக்காதலன் ஆசிம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் வினோத், தாலிப் பாட்சா ஆகியோரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். சமயோஜிதமாக செயல்பட்டு, கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார்.

Advertisements