தொகுப்பு

Archive for 2008-12-31

எதிரியை அழிக்க கற்பழிப்பு வழக்கு

டில்லியில் காவல்துறையினரும் உளவியல் நிபுணர்களும் இணைந்து நிகழ்த்திய ஒரு கருத்தாய்வின்படி, டில்லியில் பதியப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு கேசுகள் பொய்யாக சித்தரிக்கப்பட்டவை என்று கண்டறிந்திருக்கிறார்கள். தங்கள் எதிரிகளை பழிதீர்க்க இத்தகைய கற்பழிப்பு வழக்குகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. சில கேசுகளில் குடும்ப சச்சரவுகளில்கூட வேண்டாதவர்களை துன்புறுத்த ஒரு இளம் பெண்ணை “ஐயோ, கற்பழித்து விட்டானே!” என்று கூச்சலிடச் செய்த நிகழ்வுகளைக் கண்டிருக்கிறார்கள் இந்தக் குழுவினர்.

இன்னும் 15% வழக்குகளில் சில இளம் பெண்கள் தன் இச்சைப்பட்டு செக்ஸில் ஈடுபட்டபின், அதன் பின் விளைவுகளை நினைத்து பயப்பட்டு, சம்பத்தப்பட்ட ஆண்கள்மேல் கற்பழிப்பு புகார்களை அளித்துள்ளார்கள் என்பதும் வெளிவந்துள்ளது.

ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

நீங்கள் நினைக்கலாம், அவர்கள் வேறு வகை வழக்குகளை பதிவு செய்து எதிரிகளோடு சண்டையிட்டிருக்கலாமே, ஏன் கற்பழிப்பு வழக்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், என்று.

இங்குதான் நம் சட்டமியற்றுபவர்களின் முட்டாள்தனம் தெளிவாகிறது. எந்தவித சாட்சியமும் தேவையில்லை, சாட்சியச் சட்டம் (Evidence act) இதில் அமுல் செய்யப்படமாட்டாது. ஒரு பெண்ணோ அவருடைய பெற்றோரோ புகார் கொடுத்தால் போதும், முழுமையாக கூற்றம் நிரூபிக்கப்படக்கூட அவசியமில்லை, குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு (கவனியுங்கள், ஆணுக்கு மட்டும்!) தணடனை என்று சட்டமியற்றினால் அது துர்பிரயோகம் (தவறான பயன்பாடு) செய்யப்படாமல் இருக்குமா?

கற்பழிப்பு, வரதட்சணை சாவு, வரதட்சணை கேட்டு துன்புறுத்தல், மனைவியை தற்கொலைக்குத் தூண்டுதல் (கனவனை மனைவி தூண்டினால் இந்தச் சட்டம் பாயாது) இதுபோன்ற சட்டங்கள் இத்தகைய வகையைச் சார்ந்தவை. இவை அநேகமாக பொய் வழக்குகள்தான். இத்தகைய வழக்கு நடைமுறையில் நிறைய பணம் விளையாடுகிறது.

அசத்தியமேவ ஜயதே!